பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]
