தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]
