உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த 10000 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் தான் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நகரத்தில் சுமார் மூன்று வாரங்களாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. ரஷ்யப்படையினர் அந்த நகரத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், அந்த நகரத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு முயன்றனர். எனினும், தொடர் தாக்குதல்களால் மக்களை வெளியேற்ற […]
