விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மறைந்த தமிழா முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து […]
