உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட போரில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியிருக்க வாய்ப்பிருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் ஆறு மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினரால் உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனிசெப், உக்ரைன் போரில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கிய உக்ரைன் போரில் குறைந்தபட்சம் 972 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் அல்லது […]
