ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் பால்மோரல் அரண்மனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் அரண்மனையில் உள்ள மேடையில் ராஜ மரியாதையுடனும், கிரீடத்துடன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. […]
