தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. […]
