நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதிலும் முக்கியமாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் இருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. […]
