தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் அதை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு பிரிவில் ஏற்படும் காலி இடங்களை மற்றொரு பிரிவினரை கொண்டு சுழற்சிமுறையில் நிரப்பிக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
