சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 10 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்-திட்டக்குடி பகுதியில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஷேக் முகமது தலைமையில் மோட்டார் வாகன செயலாக்க பிரிவு ஆய்வாளர் பாத்திமா பர்வீன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து சரியான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் […]
