காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கியதால் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் மற்றும் சுனில் என்ற இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் […]
