தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார் மற்றும் நாட்டு வைத்தியம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நடத்துகின்ற பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். அப்போது இது பற்றி அந்த குழந்தைகளிடம் கேட்டபோது ,அவர்கள் பெற்றோர்கள்தான் இந்த நாணயம் செல்லாது என கூறி, விளையாட தந்ததாக கூறியுள்ளனர். […]
