விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி குவித்து வைத்திருந்த மணலை தாசில்தார் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள ஊரணிபட்டி பகுதியில் தனியார் கிரசரின் ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இதனைய டுத்து அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் வருவாய்த்துறையினர் ஊரணி பட்டியில் உள்ள தனியார் […]
