தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கு முதலான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் எதுவுமே செயல்படவில்லை. எனினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]
