பெரம்பலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டைப்பாடியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ராமசாமி என்பவருக்கும் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகன் தரப்பினருக்கும், ராமசாமி தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் […]
