இலங்கை நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதோடு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய பொருள்கள் தயார் செய்யும் நாடுகள் இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை நீண்ட கால அடிப்படையில் விற்பனை செய்யலாம் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இந்நிலையில் இந்தியா, ஐக்கிய […]
