தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 10 டன் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல் துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்டிஓக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆர்,டி.ஓ கவுசல்யா,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், […]
