ஒழுங்குமுறை சட்டங்களை மீறியதாக எச்டிஎஃப்சி வங்கி 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நிதி சாரா பொருள்களை விற்பனை செய்தல், வாகன கடன் வழங்குவதில் முறைகேடு என அடுத்தடுத்து புகார் வந்த நிலையில், விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
