நூற்றாண்டு பழமை மிக்க பொருட்களுக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. அதிலும் நாணயங்கள் எளிதில் வரலாற்றில் அறிந்துகொள்ள உதவும் பொருள் என்பதால் அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நாணயங்களை பல லட்சங்கள் கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். நூற்றாண்டு பழமை மிக்க நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே சில இணையதளங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. […]
