கரும்பு தோட்டத்திற்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பெரியகுளம் கரைக்கு அருகே அய்யர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அய்யர் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு சாகுபடிக்கு தயாரான நிலையில் அறுவடை செய்வதற்காக பணியாளர்கள் தோட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் தீயணைப்பு […]
