இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். […]
