விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த சுல்தான், கலந்தர் ஷாஜகான், மஸ்தான் […]
