தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் முதுகுளத்தூரில் பறக்கும் படை அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர் அய்யப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி விசாரணை நடத்திய போது லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்களின்றி 69 ஆயிரம் […]
