ஆம்பியர் நிறுவனம் மின்சார இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாநில அரசாங்கத்தின் மானியம் போன்றவை மின்சார வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆம்பியர் நிறுவனம் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேறி இருப்பதற்கு கொரோனா வைரஸ் பரவலினால் உருவாகியுள்ள அசாதாரண சூழலும் ஒரு காரணமாகும். […]
