இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]
