தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் என மொத்தமாக 1,545 பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகவே ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பசி இல்லாமல் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காகவும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]
