‘பாவம் கணேசன்’ சீரியலில் நடித்து வரும் நவீன் – கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நவீன், ‘நீ பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை செல்லமே, எங்களின் இறுதி மூட்டு வரை உன்னை நேசிப்போம்’ என கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவீன், ‘கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு குழந்தை பிறக்காது என பலரும் சாபம் விட்டனர்’ என கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.
