தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, […]
