பீகார் கயாவில் வருகிற டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் “போத் மஹோத்சவ்” எனும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தலாய் லாமா பீகார் மாநிலத்திற்கு வந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வர இருகின்றனர். இதன் காரணமாக கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு […]
