ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதகனி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சின்னத்துரை தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சின்னத்துரை […]
