காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
