ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது பாருக் கண்டியூரில் ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது இளையராஜா உணவு கேட்ட போது முகமது பாருக் இல்லை […]
