நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஹொகைன் போதைபொருள் கடத்தலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து […]
