ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
