ஹைதி அரசு அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பிடம் நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஹைதிக்கு படைகளை அனுப்புமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் […]
