கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]
