தேனி மாவட்டத்தில் சரிவர வியாபாரம் இல்லாததால் மனமுடைந்த ஹெல்மெட் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கம்பம்மெட்டு காலனியில் நல்லழகு என்ற முகமது அப்ரித்(37) என்பவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கும் வருமானம் […]
