இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த ஐந்து மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 98 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஆக்கிரமிப்பு முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு பகுதியிலும் கட்டண பார்க்கிங் […]
