புதுவை காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். காரில் பயணிப்போர் சீட்பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையிலுள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் “போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க் காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியவேண்டும். 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட்பெல்ட் […]
