நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத், தற்போது கமல்ஹாசனுக்கும் ஒரு கதை கூறியிருக்கிறார். இந்நிலையில் துணிவு திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இயக்கயிருப்பதாக வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, என்னுடைய அடுத்த திரைப்படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாக கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இப்படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார்” […]
