இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் எடுப்பதற்கு ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரையில் எடுக்கலாம். அதே நேரம் ஒரு மாதத்தில் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. அதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் […]
