இங்கிலாந்து நாட்டில் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 5ஜி தொழில் நுட்பத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனமானது அமெரிக்க பயனாளர்களுடைய தகவல்கள் அனைத்தையும் திருடி சீனாவிற்கு வழங்கி கொண்டிருப்பதாகவும் இத்தகைய காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்து அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு தடைவிதித்தது. அமெரிக்காவின் இம்முடிவை அறிந்த இங்கிலாந்து நாடு […]
