கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கும் விதமாக ஹுமனோய்டு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். […]
