ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. 68 தொகுதிகளைக்கொண்ட ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதற்கிடையில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளது. ஹிமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கு சென்ற மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடந்தது. இவற்றில் 66 % வாக்குகள் பதிவாகியது. பேரவைத்தொகுதிகளில் அதிகபட்சம் சிலாயில் 77% வாக்குகள் […]
