நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்ற 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வரிசையில் முதலாவதாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டுடே” படம் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. அதன்படி இதுவரையிலும் இந்த படம் ரூபாய் 90 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. […]
