பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான லகான் மத்திய அரசிடமே உள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் சாடியுள்ளார். ஸ்டைல் பஸார் என்னும் அமைப்பு சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய அளவிலான ஆடை கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க […]
