ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]
