இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பி ஆக பதவி உயர்வு வழங்க பஞ்சாப் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
