ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி கூட்டுப்படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி நாட்டின் தெற்கில் உள்ள ஜசான் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஏமன் குடியிருப்பாளரும், ஒரு சவுதி குடிமகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெங்காலி குடியிருப்பாளர், ஆறு சவுதி அரேபியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இரண்டு கடைகள் மற்றும் 12 கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya […]
