பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு ஹரி-மேகன் நேர்காணலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சமீபத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், அதன் பிறகு அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று ஹரி மற்றும் மேகன் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. அதில் ஹரி-மேகன் இருவரும் அரச குடும்பத்தினரை வரிசையாக குற்றம்சாட்டினர். […]
